இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சனை
இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனை:
1948 ஆம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட்டது முதல் ஒரு பிரதேசம் தனி நாடாக அங்கிகரிக்கப்பட்டது.ஆனால் இன்னொரு பிரதேசம் தனி நாடு அங்கிகரதுக்காக போராடி வருகிறது.
இதில் தனி நாடக அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கிகாரதுக்கு போராடி வரும் நாடு பாலஸ்தீனம்.
இஸ்ரேல்
யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய கிழக்கு நாடு. யூதர்கள் 70%, முஸ்லிம்கள் 20%, கிறித்தவர்கள் 10% பேரும் வாழ்ந்து வருகின்றனர்.
பாலஸ்தீனம்
இன்றுவரை பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது.2012 ஆம் ஆண்டு தான் ஐ நா சபையில் இருந்து "அப்சர்வர் ஸ்டேட்" என்ற அந்தஸ்தை பெற்றது.
இங்கு 90% அதிகமாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். மேற்குகரை மற்றும் காஸா என பாலஸ்தீனம் இரு பகுதிகளாக பிரிந்து உள்ளது.
இஸ்ரேல் இஸ்லாமிய நாடுகள் பிரச்சினை
இஸ்ரேலில் கணிசமான அளவில் வாழ்ந்து வரும் அரேபியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தபடுகிறார்கள் என்று சொல்ல படுகிறது. அரேபியர்கள் வாழும் பகுதியில் இஸ்ரேல் அரசு சட்ட விரோதமாக குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
யூதர்கள் வாழும் தனி நாடாக மாற்றும் முயற்சியில் அங்கு உள்ள இஸ்ரேல் ஆட்சியாளர்கள் சில சட்ட திருத்தங்களை கொண்டு வந்தனர். பாலஸ்தீன நில ஆக்கிரமிப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள் போன்ற காரணங்களால் மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு எதிராகவே இருந்து வந்தன.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை போவதாகவும் குற்றம் சாட்டிய இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் போக்குவரத்து, ஏற்றுமதி,இறக்குமதி போன்ற எந்தவித பொருளாதார உறவுகளும் வைத்து கொள்ளாமல் இருந்தன. முன்னாள் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் முயற்சியில் சில இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் நட்புறவை ஏற்படுத்தி கொண்டது..
ஜெருசலேம் பிரச்சினை
1967 ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்ற போது கிழக்கு ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது.ஒருங்கிணைந்த ஜெருசலேத்தை தங்கள் தலைநகராக அறிவித்தது இஸ்ரேல்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாலஸ்தீனர்கள் வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகிறது.
கிழக்கு ஜெருசலேமின் பழமையான பகுதியில் அமைந்துள்ளது அல் அக்ஸா மசூதி.
இந்த மசூதி இஷ்லாமியர்களின் மூன்றாவது புனித தளமாக விளங்குகிறது. மசூதியை சுற்றி இருக்கும் "வெஸ்ட் வால்" என்ற ஒரு பக்க சுவரை "டெம்பிள் மவுண்ட்" என்று யூதர்கள் அழைக்கிறார்கள்.இதை அவர்கள் தங்கள் புனித தளமாக கூறுகின்றார்கள்.
இஸ்ரேலும் ,பாலஸ்தீனமும் ஜெருசலேத்தை தங்களது புனித நகரமாக கருதுகின்றனர்.பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகராக ஏற்கவில்லை.
இதற்கிடையே 2017 ஆம் ஆண்டு ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தார் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப். இதன் காரணமாக இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மோதல் வலுபெற தொடங்கியது.
ஹமாஸ் அமைப்பு!
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இயங்கி வருகிறது ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு.இஸ்ரேல் அரசு மற்றும் இராணுவத்தை எதிர்த்து போராடி வருகின்றது. இந்த அமைப்பு,ஒரு தீவிரவாத அமைப்பு என இஸ்ரேல் அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இப்போது என்ன பிரச்சினை:
நெடுங்காலமாகவே கிழக்கு ஜெருசலேமில் அதிக அளவில் வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அங்கு அடிக்கடி மத பிரச்சினைகள் ஏற்பட்டு கலவரங்களாக மாறும்.அதுவும் ரமலான் நேரத்தில் வன்முறை சம்பவங்கள் நடப்பது வழக்கம்.
ஆண்டு தோறும் ரமலான் நெருங்கும் நேரத்தில் கிழக்கு ஜெருசலேத்தை கைப்பற்றியதை கொண்டாடும் வகையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் யூதர்கள் கொடியுடன் அணிவகுப்பு நடத்துவார்கள்.இந்த அணிவகுப்பு நடக்கும் போது மோதல்கள் உண்டாகும்.இந்த ஆண்டு அணிவகுப்புக்கு முன்பாகவே மோதல் ஏற்பட்டது.
ரமலான் மாதத்தில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள டமாஸ்கஸ் கேட் பிளாசா எனும் இடத்தில் இஸ்லாமியர்கள் கூடுவது வழக்கம்.இதை அடுத்து ஏப்ரல் 12 அன்று அவர்கள் கூடுவதை தடுப்பதற்காக இஸ்ரேல் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்தது.ஏப்ரல் 16 ஆம் நாள் தொழுகை நடத்துவதற்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தது இஸ்ரேல் அரசு.
இதை தொடர்ந்து கிழக்கு ஜெருசலேமில் பதற்றம் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பாலஸ்தீனியர்கள் அவர்கள் வாழும் பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் மே 7 தேதியன்று இஸ்ரேல் காவல் துறையினரக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே அல் அக்ஸா மசூதியில் நடந்த மோதலில் 200 க்குக் மேற்ப்பட்ட பாலஸ்தீனியர்கள் காயம் அடைந்தனர்.
கடந்த மே 10 அன்று பாலஸ்தீனியர்கள் அல் அக்ஸா மசூதியில் தொழுகையில் இருந்த பொழுது அங்கு சென்ற இஸ்ரேல் காவல்துறையினர் அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்த திட்டம் இடுவதாக கூறி விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையில் நிறைய பாலஸ்தீனியர்கள் தாக்கபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிடியாக ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் வீரர்களின் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.இஸ்ரேல் ராணுவம் பின்னர் வான் வழி தாக்குதலை நடத்தியது.இந்த தாக்குதலில் 30 க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.இதில் ஹமாஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் தகர்க்கப்ட்டது, மற்றும் நிறைய குழந்தைகளும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. இதில் இஸ்ரேல் மக்கள் நிறைய பேர் பாதிக்கபட்டதாக கூறப்படுகிறது.இவ்வாறு இரண்டு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
உலக நாடுகள் பார்வை:
இந்தியா
இரண்டு நாடுகளும் இடையே உடனடியாக பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும் என்று ஐநா சபையின் இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.மேலும் காஸாவில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளும் இடையே உடனடியாக பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும் என்று ஐநா சபையின் இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.மேலும் காஸாவில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா
அமெரிக்காவும் இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனையில் ஆழ்ந்த அக்கறை கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.இரு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கான வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அரபு நாடுகள்
இஸ்ரேல் உம் பாலஸ்தீன மும் தாக்குதல்களை நிறுத்தி கொண்டு அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது மேலும் பாலஸ்தீன குடிமக்களுக்கு இஸ்ரேல் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.அதோடு அல் அக்ஸா மசூதி க்கு கேடு விளைவிக்கும் செயல்களையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை
உடனடியாக மோதலை நிறுத்தி கொள்ளுங்கள்.இரு நாடுகளும் முழு போரை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள்.அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாக தெரிவித்து உள்ளது.





Thank you
ReplyDelete