Europe Football Festivel...

 ஐரோப்பிய கால்பந்து திருவிழா



24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய கால்பந்து போட்டி இன்று ஜூன் 11 தொடங்கி ஜூலை 11 வரை இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடக்கிறது.

கால்பந்து விளையாட்டில் உலக கோப்பைக்கு அடுத்து மிகப் பெரி
தும், பிரம்மாண்டதுமான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு நடக்கவிருந்த போட்டி 
கொரானா அச்சுறத்லின் காரணமாக ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது.அதன் படி 16 வது ஐரோப்பிய கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது.

வழக்கமாக இந்த திருவிழாவை ஒன்றிரண்டு நாடுகள் இணைந்து நடத்துவதே வழக்கம்.இந்த முறை இங்கிலாந்து,ஜெர்மனி,இத்தாலி, டென்மார்க்,ரஷ்யா,ஸ்பெயின், ஸ்காட்லாந்து, ஹங்கேரி, ரோமானிய, ஆஸேர்பிஜன், நெதர்லாந்து ஆகிய 11 சேர்ந்து நடத்துகிறது.



மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன.இதில் 6 பிரிவுகளாக பிரிக்கபட்டு ஏ பிரிவில் துருக்கி,வேல்ஸ்,இத்தாலி, சுவிட்ர்லாந்து பி பிரிவில் டென்மார்க், பின்லாந்து,பெல்ஜியம்,ரஷ்யா சி பிரிவில் நெதர்லாந்து,உக்ரைன், ஆஸ்திரியா,வடக்கு மாசிடோனியா டி பிரிவில் இங்கிலாந்து, குரோஷியா, ஸ்காட்லாந்து, செக் குடியரசு இ பிரிவில் ஸ்பெயின், போலந்து,சுவிடன், சுலோவக்கியா எப் பிரிவில் ஹங்கேரி,போர்ச்சுக்கல், பிரான்ஸ்,ஜெர்மனி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும்,3 வ து இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என நாக்-அவுட் சுற்றுக்கு 16 அணிகள் தகுதி பெறும். சுற்று 16 இல் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

சாம்பியன் பட்டத்தை வெல்லபோவது யார்?

எந்த அணி கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது என சில மாதங்களுக்கு முன்னரே கால்பந்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்துக்களை கூறி உள்ளனர்.இதில் உலக சாம்பியனான பிரான்ஸ் அணிக்கே அதிக வாய்ப்பு உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர். இதில் 2018 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற அணியில் உள்ள வீரர்கள் அப்படியே இருப்பதால் இந்த அணிக்கு வாய்ப்பு சற்று அதிகமாக இருக்கும் என்று 
கூறுகின்றனர்.

காரெத் சவுத்கேட் பயிற்சியின் கீழ் 2018 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்து அணி அரை இறுதி வரை முன்னேறி இருந்தது.அதனால் அந்த அணிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.இந்த அணியின் கேப்டன் ஹாரிகேன் 6 கோல்கள் அடித்து தங்க ஷு வை தட்டி சென்றார்.இங்கிலாந்து அணி இதுவரை யூரோ கோப்பையை வென்றது இல்லை.ஒருவேளை இறுதி போட்டிக்கு நுழைந்தால் அந்த 
அணி தன்னுடைய சொந்த மண்ணில் விளையாடும் என்பது குறிப்படத்தக்கது.

இந்த தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டன் இல் உள்ள வெம்ப்லி மைதானத்தில் நடைபெறுகிறது

சாதனையை நோக்கி ஓடும் ரொனால்டோ...


உலகின் நம்பர் ஒன் அணியான பெல்ஜியம் 
யூரோ தொடரில் இதுவரை ஒருமுறை கூட இறுதிசுற்றை எட்டிபாத்தி
ராத அந்த அணி இந்த முறை கோப்பையை வெல்லும் நோக்கில் ஓடுகிறது. 

நடப்பு சாம்பியனான கிறிஸ்டியானா ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணிக்காக இதுவரை அவர் 175 ஆட்டங்களில் 104 கோல்கள் அடித்து உள்ளார்.36 வயதான ரொனால்டோ இன்னும் 6 கோல்கள் அடித்தால் சர்வதேச அரங்கில் அதிக கோல்கள் அடி
த்தவரான ஈரானின் அலி டாய் (109 கோல்கள்)அவரின் சாதனையை முறியடிப்பார்.
கடந்த 27 ஆட்டங்களில் இதுவரை வெற்றியை மட்டுமே பெற்ற இத்தாலி,ஸ்பெயின், குரோஷியா போன்ற அணிகளும் எந்த நேரத்திலும் அருமையான் ஆட்டத்தை வெளிபடுத்த வாய்ப்பு உள்ளதால் களத்தில் அனல் பறக்கும்.

ரசிகர்களுக்கு கட்டுப்பாடு:

ரோம் நகரில் நடக்கும் இன்றைய தொடக்க ஆட்டத்தில் இத்தாலி - துருக்கி அணிகள் மோதுகின்றன.இத்தாலி சொந்த மண்ணில் விளையாடுகிறது என்பதால் கூடுதல் பலம் பெற்று உள்ளது.
கொரானா கட்டுப்பாடு காரணமாக 25 சதவீதம் ரசிகர்கள் மட்டும் அனுமதி அளிக்கப்படும் என இத்தாலி அரசு ஏற்கனவே கூறி விட்டது.இதன் காரணமாக 16000 ரசிகர்கள் போட்டியை நேரில் காண முடியும்.ரசிகர்கள் மைதானத்துக்குள் செல்ல கொரானா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்,48 மணி நேரத்தில் கொரானா இல்லை என்பதற்கான சான்று, என்ற கட்டுப்பாடுகள் உள்ளன.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த தொடரை சோனி சிக்ஸ்,சோனி டென், சோனி டென் 4(தமிழிலும்) ஒளிப்பரப்பு செய்கின்றன.

302 கோடியை அள்ளபோவது யார்?

யூரோ தொடரில் களம் காணும் ஒவ்வொரு அணிக்கும் போட்டி கட்டணமாக ரூ.82 கோடி கிடைக்கும். லீக் சுற்று வெற்றிக்கு 13 கோடி
யும், டிராவுக்கு 6 1/2 கோடியும் கிடைக்கும். இதை போன்று நாக்அவுட்,காலிறுதி,அரையிறுதி என அனைத்து சுற்றுக்கும் பணமழை கொட்டுகிறது.
சாம்பியன் பட்டத்தை தட்டி செல்லும் அணிக்கு பரிசு தொகை 89 கோடி வழங்கப்படும்.ஒவ்வொரு சுற்று வெற்றி மற்றும் போட்டி கட்டணம் என எல்லாவற்றையும் சேர்த்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு அதிகபட்சமாக ரூ.302 கோடி யாய் பரிசாக அல்லும்.



#sportyatamazon.blogspot.com
#fittyandexercise.blogspot.com



Comments